2004 -ல் தினமலர் நாளிதழில் பணிபுரிய உள்ளே நுழைந்தபோது ஏதோ புதிய உலகமாயிருந்தது. PTS, லேஅவுட், மெசின், பிராசசிங் செக்சன் என்று நிறைய புதிய பெயர்களை கேட்டபோது. PTS செக்சனில் உள்ளே நுழைந்தபோது முதலில் டைப்பிங்தான். ஸ்ரீலிபி கமாண்ட் பிராம்ப்ட் . பின் படிப்படியாக சில விசயங்களை புரிந்துகொண்டேன். அப்போது ஸ்ரீலிபி பாண்ட் எல்லாம் 800 ல் இருந்து ஆரம்பிக்கும். ஆனால் தலைப்புகள் மட்டும் jag1 என்று இருக்கும். ஏன் இது மட்டும் இப்படி இருக்கிறது என்று தெரியாமல் பக்கத்தில் இருந்து ராஜேஷ் சாரிடம் கேட்டேன். அவர்தான் சொன்னார். இது ஜெகதீஸ் சார் கிரியேட் பண்ணினார்.

அதன் பின் பனீசியா வெ ளியிட்ட 200 தமிழ் பாண்ட்களை நானும் பயன்படுத்த பார்க்க இன்டிசைனில் அந்த எழுத்துரு வேலை செய்யவில்லை.அதன்பின் இணையத்தில் தேடி கண்டுபிடித்து என்கோடிங் சில என்கோடிங்களை சேர்த்தேன். இன்டிசைனில் பணிபுரிந்தது. அதன் பின் தமிழ் கிரியேசன் என்ற பெயரில் எழுத்துருக்களை மாற்றம் செய்து பணிபுரிந்தேன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இணையத்திற்கு ஒரே மாதிரியான எழுத்துருக்களையே பயன்படுத்துகிறோமே என்று TAM லிருந்து யுனிகோடுக்கு மாற்றம் செய்தேன். ஆனால் நிறைய பிரச்னை. அதன் பின்னர் திரு.தகடூர் கோபி அவர்கள் உதவியுடன் இதோ இரண்டு எழுத்துருக்களை வடிவமைத்து இணையத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.

இணையத்தில் லதா எழுத்துருவை மட்டுமே பயன்படுத்தி தளத்தினை வடிவமைப்பவர்களுக்கு இனி புதியதாக யுனிகோடு கூகிள் வெப் பாண்ட் போன்ற சேவை வரும்….

http://selvamurali.in

புதிய எழுத்துரு

http://visualmediatech.com/fonts

இப்போதைக்கு உள்ளடக்க எழுத்துரு மட்டும் இணைத்திருக்கிறேன். பின்னர் தலைப்பும் வெளியிடப்படும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்